ராசிக்கற்களைவிற்கும் பல வியாபாரிகளுக்கு ஜோதிடத்தின் சூட்சுமம் தெரிவதில்லை. அவர்களால் சுட்டிக்காட்டப்படும் ஜோதிடர்களுக்கும், வாங்குபவர்களின் ஜாதகத்தை முழுமையாக ஆராய்ந்திட நேரமிருப்பதில்லை. இதனால் விற்றவன் கொண்டாட, வாங்கியவன் திண்டாடும் நிலை உண்டாகிறது. உதாரணத்திற்கு, கடக லக்னம், மகர ராசி உள்ள ஒருவர் ரத்தின வியாபாரியின் பரிந்துரை யின்படி, நீலக்கல் மோதிரம் அணிந்தார். அவருடைய ஜனன ஜாதகத்தில் எட்டில் சனி. அவருக்கு சனி தசை ஆரம்பித்தவுடனேயே, தொழிலில் சரிவு ஏற்பட்டு குடும்பத்தினரையும் பிரிந்துவிட்டார்.ரத்தினங் களைக் கடையில் வாங்கி அப்படியே அணியக் கூடாது. அவற்றை அணியப் போகிறவரின் ராசி, நட்சத்திரப்படி நல்ல நாள், நேரம் பார்த்து, மந்திர உருவேற்றிய பின்பே அதை அணியவேண்டும். உப ரத்தினங்களை மோதிரமாக அணிவதை விட, மாலையாக அணிவதே சிறந்தது.
நமது வாழ்க்கையின் தேவைக்கேற்ற உபரத்தினங்களை அணிவதால் நம் லட்சியத்தை அடையலாம். குவார்ட்ஸ் கிரிஸ்டல்கள் இயற்கையாகவே மின்காந்த சக்திகளை கிரகித்து வெளியேற்றும் தன்மையுடையவை. பிரபஞ்ச சக்தியை ஆகாயத்திலிருந்து பெற்று நம் கட்டளைகளை ஏற்று செயல்படுகின்றன. பிறருடைய அன்புக்காக ஏங்குபவர்கள் ரோஸ் குவார்ட்ஸ் அணியலாம். பொதுவாக கணவன்- மனைவிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் குறைந்திட இந்த உபரத்தினமே சிறந்தது. கணவன்- மனைவி இருவரின் நடசத்திரங்களையும் கணக்கிட்டு தாராபலம் உள்ள நாளில் அணிதல்வேண்டும். அவ்வாறில்லாமல் நைதன தாரையுள்ள நாளில் அணிந்தால் நல்ல பலன்கள் கிடைப்பதில்லை. "அன்பின் ஊற்று' என்று அழைக்கப்படும் அனாஹதச் சக்கரத்தைத்தூண்டி செயல்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பது ரோஸ் குவார்ட்ஸ் எனும் உபரத்தினக் கல்லேயாகும்.
அற்புதம் செய்யும் அனாஹதம் (இதயச் சக்கரம்)
இதை அன்புச் சக்கரம் என்றும் சொல்வதுண்டு. இது நெஞ்சுப் பகுதியில் அல்லது இதயத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய குணங்கள் அன்பு மற்றும் படைப்பாற்றல் ஆகும். இந்த சக்கர மானது பஞ்சாட்சர எழுத்துக்களான "சிவயநம' என்னும் எழுத்துகளில் ஒன்றான "சி' என்னும் எழுத்தையும் அதன் தத்துவத்தையும் விளக்குவதாக அமைகின்றது. அன்பே சிவம் என்பதே இதன் தத்துவம். தமர் எனும் நம் இதயக் குகையில், குரு குகன் வாசம் செய்யும் இடமும் இதுவேயாகும். இது வாயு தத்துவத்தைக் குறிக்கிறது. மூன்று கீழ் நிலைச் சக்கரங்களுக்கும், ஆன்மிகம் சார்ந்த மூன்று மேல்நிலைச் சக்கரங்களுக்கும் இடையிலிருந்து ஒரு இணைப்புப் பாலமாகச் செயல்படுவதே அனாஹத மாகும். அனாஹதச் சக்கரம் பன்னிரண்டு இதழ்கள் கொண்ட தாமரை. இந்த இதழ்கள் ஒவ்வொன்றும் ஒரு நாடியைக் குறிக்கும். இந்த இதழ்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ஸ்வரங்கள் உண்டு. அவற்றை முறையாக உச்சரிப்பதன்மூலம் இந்த நாடிகளின் இயக்கங்களை சரிசெய்ய முடியும். சக்கரத்தின் மையத்தில் அறுகோண வடிவத்தில் பிரகாசமாக ஒளிவீசும் பொன்னிற ஜோதியைக் கொண்டது. புற உலகில் என்னென்ன சாதிக்க வேண்டுமென நினைக்கிறமோ அவையனைத்தை யும் தகுந்த உபரத்தின மாலையணிந்து தஹர வித்யா மூலம் ஸ்வர தியானம் செய்தால் அடையவியலும்.
ரோஸ் குவார்ட்ஸ்
ரோஸ் குவார்ட்ஸ், ஸ்படிகக் கல் வகையைச் சேர்ந்தது. வெளிர்சிவப்பு ரோஜாப்பூ நிறத்தில் இருப்பதால் இதற்கு இப்பெயர் அமைந்தது.
ரோஸ் குவார்ட்ஸ் பதிக்கப்பட்ட அணிகலனை அணிவதால் உண்டாகும் நன்மைகள்-
= கிரகங்களில் செவ்வாய், சுக்கிரன் இரண்டின் கலவையும் கொண்டதால், அன்பு ஸ்படிகம் என்றே அழைக்கப் படுகிறது.
=ஜனன ஜாதகத்தில் செவ்வாய், சுக்கிரனின் தோஷத்தால் திருமணத் தடையுள்ளவர்களுக்கு தோஷத்தை நீக்கி, நல்லசேதி தரும் உபரத்தினம் இதுவேயாகும்.
= கிரேக்க புராணங்களில் போர்க் கடவுளான ஆரிஸ் மற்றும் காதலின் கடவுளான அஃப்ரோ டைட் ஆகிய இருவரின் சக்தியும் இணைந்த ஒன்று என்று கருதப் படுகிறது.
=ஆறு ஆதாரங்களில் அனா ஹத சக்கரத்தைத் தூண்டி, அன்பைப் பெருக்கும் ஒரு ரத்தினமாக இது அமைகிறது
= இந்தக்கல் சுகம், மனம், அன்பு ஆகியவற்றைக் குறிக்கும் நான்காம் பாவத்தை நன்றாக இயக்குகிறது.
= இது திருமண உறவுகளில் நம்பிக்கையையும் நல்லிணக்கத்தை யும் வளர்க்கிறது.
=ஜனன ஜாதகத்தில் லக்கன திரிகோணங்களில் சூரிய, சந்திரன் இருந்து, சனி அல்லது ராகுவின் பார்வையால் பாதிக்கப்பட்டால் ஜாதகருக்கு தைரியக்குறைவு உண்டாகும். இந்த அமைப்பு டையவர்களுக்கு ரோஸ் குவார்ட்ஸ் ஒரு வரப்பிராசாதம்.
=இதயத்தின்மீதுள்ள தேவை யற்ற உணர்ச்சிகளாலான தாக்கத் தைக் குறைக்கிறது.
=அமைதியான மற்றும் உறுதி யளிக்கும், இது, துக்க காலங்களில் ஆறுதலளிக்க உதவுகிறது.
= ரோஸ் குவார்ட்ஸ் எதிர் மறை எண்ணங்களை அகற்றி, சுற்றுச்சூழல் மாசுபாட்டிலிருந்து பாதுகாக்கிறது.
= இது சுய நம்பிக்கை மற்றும் சுய மதிப்பை ஊக்குவிக்கிறது.
= ரோஸ் குவார்ட்ஸ் உடல், இதயம் மற்றும் சுற்றோட்ட அமைப்பை பலப்படுத்துகிறது; சமப்படுத்துகிறது.
= உடல் திரவங்களிலிருந்து அசுத்தங்களை வெளியேற்று கிறது. உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. மார்பு மற்றும் நுரையீரல் பிரச்சினைகளுக்கு உதவுகிறது.
= ரோஸ் குவார்ட்ஸுக்கு கருவுறுதலை அதிகரிக்கவும், கருச்சிதைவிலிருந்து பாதுகாக்க வும் சக்தி உள்ளது.
=கணவன்- மனைவியிடையே ஒற்றுமையை அதிகரிக்கச் செய்யும். = காதல் திருமணங்களுக்கு ஏற்ற ஒரு ரத்தினம்.
=குடும்பத்தில் அன்பு மேலோங்கச் செய்து, சண்டை களைக் குறைத்து அமைதியைக் கொண்டுசேர்க்கும்.
= இந்த ரத்தின மாலை கொண்டு மகாலட்சுமி மந்திரம் ஜெபிக்க செல்வ வளம் பெருகும்.
= எப்பொழுதும் இந்த மாலை அணிந்துகொள்ள ஜனவசியம் உண்டாகும். எதிரிகளும் நண்பராவார்கள்.
= வசியம், வசீகரம் ஆகிய வற்றைத் தரும் உபரத்தினம் இதுவேயாகும்.
உடல் ஆரோக்கியத்தைத் தரும் ரோஸ் குவார்ட்ஸ்
= இதய நோய்கள் தீரும்.
= மனக்கலக்கங்கள் மறையும்.
= மன நோய்கள் நீங்கும்.
= ஆஸ்துமா போன்ற சுவாச நோய்களின் பாதிப்புக் குறையும்.
=அனாஹதத்தின் ஆளுமை யின்கீழ் உள்ள "தைமஸ்' என்ற நாளமில்லா சுரப்பியின் இயக் கத்தை சீராக்கி நோயெதிர்ப்பு சக்தியைத் தரும்.
(தொடரும்)
செல்: 77080 20714